Friday 29 July 2016

உன் பேர் சொல்லு


உன் பேர் சொல்லு
ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு.
அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க. அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்.
முதல்ல ஒரு வகுப்புக்குள்ள போன உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க!.

சரி எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி. .
"உன் பேர் சொல்லு"
"பழனி"
"உன் அப்பா பேரு"
"பழனியப்பா",
அடுத்தப் பையன எழுப்பி ,
"உன் பேர் சொல்லு"
"மாரி"
"உன் அப்பா பேரு"
"மாரியப்பா"
அவருக்கு கொஞ்சம் டவுட் வருது.
இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி.
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு"
"பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு,
சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு.

அடுத்தப் பையன எழுப்பினாரு.
"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு."
(மனசுக்குள்ள ஒரு பெருமிதம்)
"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு"
"ஜான்சன்"
கொஞ்சமா டென்சன் ஆயிட்டு, அடுத்த பையன எழுப்பி,
உன் அப்பா பேர சொல்லு,
"ரிச்சர்டு"
உன் பேரு,
"ரிச்சர்டசன்"
கொலவெறி ஆயிட்டாரு,
கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,
உன் தாத்தா பேர சொல்லு,
"அப்பாவோட தாத்தாவா?,
அம்மாவோட தாத்தாவா?"
ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு,
அப்பாவோட தாத்தான்னாரு
"மணி",
"சரி அப்பா பேரு?",
"ரமணி",
"உன் பேரு?",
"வீரமணி"
அப்புறம் என்ன !!!! அதுக்கு அப்பறம் அந்த
பள்ளிக்கு எந்த ஆய்வாளரும் வரதே இல்ல.

Friday 24 June 2016

படித்ததில் பிடித்தது....

ஒரு பிரபலமான பேச்சாளர் ஒரு முறை ஒரு கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு கூறினார்:
என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய "மனைவி"யுடன் கழித்த நாட்களே என்று". இதைக் கேட்ட கூட்டத்தினர் அதிர்ச்சி அடைந்தனர் , யாரும் எதுவும் பேசவில்லை.
பேச்சாளர் தொடர்ந்தார்.. அந்த இன்னொருவருடைய மனைவி, "என் தாய் தான்" என்றார். ;) :D
கூட்டத்தில் பலத்த சிரிப்பும், கரகோஷமும் ஏற்பட்டது.
இதை கேட்ட பார்வையாளர்களில் இருந்த ஒருவர், வீட்டிற்கு சென்று இதனை தானும் தன் மனைவியிடம் கூறி, வியப்பில் ஆழ்த்த நினைத்தார்.




வீட்டிற்கு சென்ற அவர், இரவு உணவு உண்ட பின், தன் மனைவியை நோக்கி," என் வாழ்வில் மிகச் சிறந்த நாட்களாக நான் கருதுவது, "நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாட்களே" என்று கூறிவிட்டு அடுத்த வாக்கியத்தை கூற முற்படுகிறார்.
கண் விழித்து பார்த்த போது அவர் ஆஸ்பத்திரியில் இருக்கிறார், அவர் மனைவி வீசி எறிந்த கொதித்த வெந்நீர் பட்ட கொப்புளங்களுடன்.

நீதி :அடுத்தவன் பண்னுறானேன்னு நாமும் யோசிக்காம ஏதாச்சும் பண்ணிணா இப்படி தான்!

Wednesday 22 June 2016

கும்பகோணத்தை கலக்கும் பெண் பைக் மெக்கானிக்



இந்த சகோதரியின் பெயர் ரோகிணி. கும்பகோணத்தை சேர்ந்த இவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத இவர் பைக் மெக்கானிக்காக பணிபுரிகிறார். scooty முதல் Bullet வரை எதுவாக இருந்தாலும் பிரித்து மேய்கிறார். இவருக்கு நம் வாழ்த்துக்களை சொல்லுவோம்  

எனக்கே விபூதி அடிக்க பாத்தே ல !!!!


ஒரு குட்டி கதை:-

ஏர்டெல் நிறுவனர்
இறைவனை நோக்கி கடும் தவம்
புரிந்தார்,அவரது தவத்தின் பயனாக கடவுள் அவர்
முன்
தோன்றி "உனக்கு 10 வாய்ப்புகள்,அந்த 10
முறையும் நீ
நினைப்பது நடக்கும்" என்று அருளினார்.
பாபா ரஜினி போல் முதலில் இதில்
முழு நம்பிக்கை இல்லாத ஏர்டெல்
நிறுவனர்,
'அந்தபட்டம் தன் கைக்கு வர
வேண்டும்,
அந்தபெண்
வந்து தன்னுடன் பேச வேண்டும்' போன்ற
சிறு சிறு விசயங்களை சோதித்து 6
வாய்ப்புகளை வீணடித்தார்.
வரத்தின் மீது நம்பிக்கை வந்தது, 7வது வரமாக
தன் போட்டி நிறுவனமான வோடபோன் நிறுவனர்
சிறைக்கு செல்ல வேண்டினார். அதே போல் வோடபோன்
நிறுவனர்
ஒரு மோசடி வழக்கில் சிறை சென்றார்.
மகிழ்ச்சியடைந்த அவர் மீதமுள்ள 3
வரங்களை தெளிவாக பயன்படுத்த திட்டமிட்டார்.
அவற்றை பயன்படுத்த தான்
உயிரோடு இருப்பது அவசியம் என்பதால் முதல்
வரமாக
"எனக்கு மரணம் வரக்கூடாது" என்று கேட்ட
போதே கார் விபத்தில் சிக்கி அவர் மரணமடைந்தார்.
நேரே கோவத்துடன் கடவுளிடம் சென்ற அவர், "10
வாய்ப்புகள்
தருவதாக சொல்லி
7 வாய்ப்புகள் தான்
தந்தாய்,
8வது வாய்ப்பை பயன்படுத்தியும்
பலிக்காமல் நான் இறந்துவிட்டேன்.நீ
ஒரு ஏமாற்றுக்காரன்" என்றார்.
-
-
















கடவுள் பொறுமையாக,
"நீ மட்டும் 10
ரூபாய்க்கு கார்டு போட்டா 7
ரூபாய்க்கு தான பேச விடுற?
அது மாதிரி தான்
இதுவும்,
3 வரம்
சர்விஸ்சார்ஜ்.
யாரங்கே��������
இவனை நரகத்தில் தள்ளுங்கள்"
என்றார்.....

Tuesday 21 June 2016

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) உலக சாதனை

வரலாற்றில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ஒரு தடம் பதித்துள்ளது.. இன்று சரியாக இந்திய நேரம் 09:26 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, 20 செயற்கைக் கோள்களை ஏந்திய PSLV C34 என்ற விண்கலன் விண்ணை நோக்கி வெற்றிகரமாக  ஏவப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி வெற்றிகரமான பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது.
PSLV C34ன் வெற்றிக்கு இந்திய பிரதமர் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இந்த வெற்றியை இஸ்ரோ விஞ்ஞானிகள் கைதட்டி கொண்டாடினர். PSLV C34 விண்கலம், விண்வெளியில் 10 மடங்கு குறைந்த செல்வில் 20 செயற்கை கோள்களை செலுத்தப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இரண்டு மாணவ செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட உள்ளன. சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் ஒரு செயற்கைக் கோளும், புனே பொறியியல் கல்லூரியின் செயற்கைக் கோளும்தான் அவை. நம் ஏவுகணையில் வெறும் 1 கிலோ எடையுள்ள SWAYAM எனும் இந்திய செயற்கைக் கோளும் பயணிக்கிறது.

1. Cartostat-2 தொடர் விண்கலம் (Cartostat-2 series satellite)(இந்தியா):
இதுதான் இந்த ஏவுகணையில் முதன்மையான செயற்கைக் கோளாகும். பயன்பாடு: வரைபட பயன்பாடு, கடலோர நிலக் கட்டுப்பாடு, சாலை நெட்வொர்க்கிங், நீர் விநியோகம், புவியியல் தகவல் முறைமை பயன்பாடுகள்.
இதன் எடை 727.5 கிலோவாகும். ஏவுகணையிலேயே அதிக எடையுள்ள செயற்கைக் கோள் இதுதான்.

2. LAPAN-A3(இந்தோனேசியா):
இது பூமியைக் கண்காணிக்கும் மைக்ரோ செயற்கைக் கோள்.
இந்த செயற்கைக்கோளின்ண்கா முக்கியமான பயன்பாடு கண்காணிப்பு, நிலப் பயன்பாடு, இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு.
இதன் எடை 120 கிலோ.
3. M3MSAT (கனடா):
குறைந்த புவி சுற்றுவட்ட பாதையில் இருந்து வரும் சமிஞைகளை சேகரித்து ஆய்வு செயதலே, 85 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோளின் முதன்மையான நோக்கம்.

4. GHGSAT- D (கனடா):

25.5 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக் கோளின் தலையாய நோக்கம் பூமியில் கிரீன்ஹவுஸ் வாயுக்களின் செறிவைக் கண்டறிதலே.

5. BIROS (ஜெர்மனி):
உயர்வெப்ப நிகழ்வுகளின் தொலை உணர்வை (Remote Sensing of High temperature events) அறிவதற்கே இந்த செயற்கைக் கோள் ஏவப்படுகிறது. இதன் எடை 130 கிலோ.

இந்தியா-US நட்புறவைக் குறிப்பதற்காக ISRO, Americaவின் 13 சிறிய செயற்கைக் கோள்களைத் தாங்கிச் செல்லும். இதில் கூகுளிற்குச் சொந்தமான Tera Bella நிறுவனத்தின் "Earth Imaging Satellite" அடங்கும். 110 கிலோ எடையுள்ள SkySat Gen-2 என்ற இந்த கோளின் இரு முக்கிய அம்சங்கள்:
√sub-meter resolution images
√ high definition video

மேலும், இரண்டு மாணவ செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட உள்ளன. சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் ஒரு செயற்கைக் கோளும், புனே பொறியியல் கல்லூரியின் செயற்கைக் கோளும்தான் அவை. நம் ஏவுகணையில் வெறும் 1 கிலோ எடையுள்ள SWAYAM எனும் இந்திய செயற்கைக் கோளும் பயணிக்கிறது
20 செயற்கைக் கோள்களின் மொத்த எடை 1,288 கிலோ. 26 நிமிடத்தில் 20 செயற்கைக் கோள்கள் விண்ணில் புகுத்தப்படும். இதைக் குறித்து ISRO chairman கூறுவதாவது, "20 செயற்கைக்கோள்கள் பறவைகள் போல விண்வெளியில் பறக்கும்! ஒவ்வொன்றும் விண்ணில் செல்லுத்தப்பட்டதும், ஒன்றோடு ஒன்று சாராமல் தங்களது பாதையில் இலக்கை நோக்கி செயல்பட துவங்கும்.

ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டதும் 26 நிமிடங்களில் செயற்கைக்கோள்கள் விண்வெளியில் நினைத்த பாதையில் சுழலும்.16வது நிமிடத்தில் முதல் கோள் புகுத்தப்படும்; அடுத்த 10 நிமிடங்களில் மற்ற 19 செயற்கைக் கோள்களும் விண்ணில் செலுத்தப்படும்.

ஒரே ஏவுகணையில் அதிக செயற்கைகோளைச் செலுத்தும், இந்தியாவின் மிகப் பெரிய முயற்சி இது. ஏப்ரல் 28, 2008ல், உலகிலேயே அதிக அளவு செயற்கைக் கோள்களை (10 செயற்கைக்கோள்கள்) ஒரே ஏவுகணையில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி சாதனை படைத்தது ISRO. 2013ல், America Minotaur-1 என்ற விண்கலம் 29 செயற்கைக் கோள்களை ஒரே ஏவுகமையில் செலுத்தி நம் சாதனையை முறியடித்தது. மீண்டும், 2014ல் ரஷ்யா 37 செயற்கைக்கோளை ஒரே ஏவுகணையில் செலுத்தி சாதனை படைத்தது. தற்போது, இந்தியா குறைந்த செலவில் அதிக செயற்கைக் கோளகளை விண்ணில் செலுத்தி சாதனை படைக்கவுள்ளது.

ISROவின் இந்த புதிய முயற்சி Jeff Bezos மற்றும் Elon Musk ஆகிய பில்லினியர்களின் விண்கல நிறுவனத்திற்கு சவால் விடுவதாக உள்ளது. மொபைல் நிறுவனங்கள், இணைய சேவை மையங்கள் எனப் பல பேரின் தேவையைப் பூர்த்தி செய்ய, முழுக்க முழுக்க அரசுக் கட்டுப்பாட்டில் இருந்த இந்த துறை தனியார்மையமாக மாற்றப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம், அவர்கள் குறைந்த செலவில் தங்கள் ஏவுகணைகளை விடுவதால்தான். இந்நிலைக்கு ஒரு சவால் விடுகிறது நம் நாட்டு விஞ்ஞானிகளின் செயல்!

First Love

ஒரு பெண் இரவு 12 மணியளவில் தன் காதலனை அவசரமாக பார்க்கவேண்டும் என்றழைக்கிறாள். பதறிப்போன காதலன் வேகமாக வருவகையில் அவனை பார்த்தவுடன் ஓடிவந்து கட்டியனைத்து அழுகிறாள். என்னாச்சு!!! ஏன் அழுகிறாய்!!! என்று கேட்க. நம் காதல் என் வீட்டிற்கு தெரிந்துவிட்டது. விடிந்தால் எனக்கு ரகசிய திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன்! நாம் எங்காவது ஓடிவிடலாம் என்று சத்தமாக அழுகிறாள். 
காதலனோ வறுமையில் பிறந்தவன். நன்றாக யோசித்து பெண் வீட்டில் முறைபடி பெண் கேட்பதுதான் சரி என்று அவளை அழைத்துகொண்டு சினிமா ஹிரோ போல அவள் வீட்டிற்கே சென்றுவிட்டான். இவள் அழுதுகொண்டு வருவதை பார்த்தவர்கள். தங்கள் வீட்டுப் பெண்ணை இவன்தான் ஏதோ செய்திருக்கிறான் என்று தவறாக நினைத்த அவளின் சகோதரன் காதலனை சரமாரியாக தாக்குகிறான். 
முகமெல்லாம் இரத்தம் சொட்ட காதலனை பார்த்தவள் "அய்யயோ" அடிக்காதீர்கள்"! நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை! எங்களை வாழவிடுங்கள் அவன் பாவம்... ஆஆஆ... அம்மா" அய்யயோ"!!! என்று அலறுகிறாள். இவள் அழுகுரல் யார் காதிலும் விளவில்லை. அடி பயங்கரமாக விழ காதலனின் ஒரு காலை அடித்தே உடைத்துவிடுகின்றனர். வேகமாக வீட்டிற்குள் ஓடி ஒரு கத்தியை எடுத்துவந்து அடேய்" இன்னொரு அடி அவன் மீது விழுந்தால் இங்கேயே நான் கழுத்தை அருத்துக்கொள்வேன் என்கிறாள். 

என்னை மறந்துவிடுடா! நீ எனக்கு வேண்டாம்! போடா... ஆஆஆ... என்று மனநொந்து மண்டியிட்டு அழுகிறாள். மெதுவாக நகர்ந்துவந்த காதலன் சொல்கிறான் நீ அழாதேமா இப்போதுதான் எனக்கு வலிக்கிறது என்று மயங்கிபோனான். அழுது அழுது காதலியும் அவன் மீது மயங்கிவிடுகிறாள். (தன்னுடைய முதல் காதல். அதாவது இவ்வளவு கதையையும் தன் மனைவியிடம் சொல்லி அழுகிறான் அந்த காதலன்.) 
கண் கசிந்தபடி பிறகு என்னாச்சு!!! என்கிறாள் அவனது மனைவி. என் மேல் போலீஸ் புகார் கொடுத்து ஒரு வருடம் சிறையில் இருந்தேன். சிறையிலிருந்து வந்த நான் என் நன்பனை பார்க்க சென்றேன். அப்போதுதான் தெரிந்தது என் நன்பனின் மனைவிதான் என் முதல் காதலி என்று... அதற்கு மேல் அவனால் சொல்லமுடியாமல் வானத்தை பார்த்து ஆஆஆஆ... என்று அலறுகிறான். 
இப்போதுதான் அவன் மனைவிக்கு கனவன் மீது காதல் வந்தது. அவன் சட்டையை பிடித்து இழுத்து மார்போடு அனைத்துகொண்டு "அவள் போனாள் போகட்டுமே!!! உங்களுக்காக நான் இருக்கிறேனே! உங்கள் மனதில் இவ்வளவு வலி இருக்கிறதே... அய்யோ" எப்படி தாங்கிகொண்டீர்கள்... நான் உங்கள் மனைவி. உங்களுக்காக பிறந்தவள். இனி நான் உங்களை விட்டு ஒரு நொடி கூட பிரியமாட்டேன். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம்! செத்தால் ஒன்றாக சாவோம்! என்று அவன் முகத்தில் முத்தமழையாய் பொழிகிறாள். 
என் மனைவி என்னை புரிந்துகொண்டாள் இதுவே போதுமடி என்று அவளை தூக்கி அடியே ராச்சஷி....பொண்டாட்டி.. என்று சத்தமாக சிரித்துக்கொண்டே அழுகிறான். (
(எப்படி காதலிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறது அந்த முதல் காதல். நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள்...