Tuesday, 21 June 2016

First Love

ஒரு பெண் இரவு 12 மணியளவில் தன் காதலனை அவசரமாக பார்க்கவேண்டும் என்றழைக்கிறாள். பதறிப்போன காதலன் வேகமாக வருவகையில் அவனை பார்த்தவுடன் ஓடிவந்து கட்டியனைத்து அழுகிறாள். என்னாச்சு!!! ஏன் அழுகிறாய்!!! என்று கேட்க. நம் காதல் என் வீட்டிற்கு தெரிந்துவிட்டது. விடிந்தால் எனக்கு ரகசிய திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன்! நாம் எங்காவது ஓடிவிடலாம் என்று சத்தமாக அழுகிறாள். 
காதலனோ வறுமையில் பிறந்தவன். நன்றாக யோசித்து பெண் வீட்டில் முறைபடி பெண் கேட்பதுதான் சரி என்று அவளை அழைத்துகொண்டு சினிமா ஹிரோ போல அவள் வீட்டிற்கே சென்றுவிட்டான். இவள் அழுதுகொண்டு வருவதை பார்த்தவர்கள். தங்கள் வீட்டுப் பெண்ணை இவன்தான் ஏதோ செய்திருக்கிறான் என்று தவறாக நினைத்த அவளின் சகோதரன் காதலனை சரமாரியாக தாக்குகிறான். 
முகமெல்லாம் இரத்தம் சொட்ட காதலனை பார்த்தவள் "அய்யயோ" அடிக்காதீர்கள்"! நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை! எங்களை வாழவிடுங்கள் அவன் பாவம்... ஆஆஆ... அம்மா" அய்யயோ"!!! என்று அலறுகிறாள். இவள் அழுகுரல் யார் காதிலும் விளவில்லை. அடி பயங்கரமாக விழ காதலனின் ஒரு காலை அடித்தே உடைத்துவிடுகின்றனர். வேகமாக வீட்டிற்குள் ஓடி ஒரு கத்தியை எடுத்துவந்து அடேய்" இன்னொரு அடி அவன் மீது விழுந்தால் இங்கேயே நான் கழுத்தை அருத்துக்கொள்வேன் என்கிறாள். 

என்னை மறந்துவிடுடா! நீ எனக்கு வேண்டாம்! போடா... ஆஆஆ... என்று மனநொந்து மண்டியிட்டு அழுகிறாள். மெதுவாக நகர்ந்துவந்த காதலன் சொல்கிறான் நீ அழாதேமா இப்போதுதான் எனக்கு வலிக்கிறது என்று மயங்கிபோனான். அழுது அழுது காதலியும் அவன் மீது மயங்கிவிடுகிறாள். (தன்னுடைய முதல் காதல். அதாவது இவ்வளவு கதையையும் தன் மனைவியிடம் சொல்லி அழுகிறான் அந்த காதலன்.) 
கண் கசிந்தபடி பிறகு என்னாச்சு!!! என்கிறாள் அவனது மனைவி. என் மேல் போலீஸ் புகார் கொடுத்து ஒரு வருடம் சிறையில் இருந்தேன். சிறையிலிருந்து வந்த நான் என் நன்பனை பார்க்க சென்றேன். அப்போதுதான் தெரிந்தது என் நன்பனின் மனைவிதான் என் முதல் காதலி என்று... அதற்கு மேல் அவனால் சொல்லமுடியாமல் வானத்தை பார்த்து ஆஆஆஆ... என்று அலறுகிறான். 
இப்போதுதான் அவன் மனைவிக்கு கனவன் மீது காதல் வந்தது. அவன் சட்டையை பிடித்து இழுத்து மார்போடு அனைத்துகொண்டு "அவள் போனாள் போகட்டுமே!!! உங்களுக்காக நான் இருக்கிறேனே! உங்கள் மனதில் இவ்வளவு வலி இருக்கிறதே... அய்யோ" எப்படி தாங்கிகொண்டீர்கள்... நான் உங்கள் மனைவி. உங்களுக்காக பிறந்தவள். இனி நான் உங்களை விட்டு ஒரு நொடி கூட பிரியமாட்டேன். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம்! செத்தால் ஒன்றாக சாவோம்! என்று அவன் முகத்தில் முத்தமழையாய் பொழிகிறாள். 
என் மனைவி என்னை புரிந்துகொண்டாள் இதுவே போதுமடி என்று அவளை தூக்கி அடியே ராச்சஷி....பொண்டாட்டி.. என்று சத்தமாக சிரித்துக்கொண்டே அழுகிறான். (
(எப்படி காதலிக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்துவிட்டு இறந்துவிடுகிறது அந்த முதல் காதல். நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள்...

No comments:

Post a Comment