Tuesday, 21 June 2016

ஒரு லோன் வேணும்... ஹி ஹி ஹி...

Bank Manager: வாங்க தம்பி என்ன வேணும் உங்களுக்கு 
நாம்: ம்ம்ம்ம் லோன் வேணும் சார் 
Bank Manager: அப்படியா நீங்க எங்க வொர்க் பண்றிங்க 
நாம்: face book ல சார் 




Bank Manager: அடேயப்பா அது பெரிய கம்பெனி ஆச்சே வெரி குட்
நாம்: ஆமா சார் 
Bank Manager: உங்க ஆபிசு எங்க இருக்கு தம்பி 
நாம்: வீட்டுலதான் சார். 
Bank Manager: அப்பிடியா சரி அங்க நீங்க என்ன வொர்க் பண்றிங்க 
நாம்: போஸ்ட் போடறேன் சார் 
Bank Manager: என்ன நீங்க போஸ்ட் மேனா 
நாம்: இல்ல சார் நான் அங்க கட்டுரை அப்புறம் போட்டோ இத எல்லாம் பண்றேன் சார்.
Bank Manager: அப்போ நீங்க face book ல ரைட்டர்னு சொல்லுங்க 
நாம்: ரைட்டு சார்.
Bank Manager: உங்க வொர்க்கின் அவர்ஸ் எப்பிடி
நாம்: 24 அவர்ஸ் சார்.
Bank Manager: லீவு உண்டா.
நாம்: இல்ல சார் . வேணுன எடுத்துக்கிடலாம் . நான் லீவே எடுத்தது இல்ல சார் 
Bank Manager: வெரி குட் .ஆமா உங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் 
நாம்: ஒரு நாளைக்கு எல்லாம் சேர்த்தா ஒரு மூணாயிரம் கிடைக்கும் சார்.
Bank Manager: அவ்வளவு பணமா 
நாம்: பணம் இல்ல சார் . likes 
Bank Manager: likes ஆ .அப்போ face book ல சம்பளம் கொடுக்க மாட்டாங்களா 
நாம்: அதுக்காகத்தான் சார் லோன் கேட்டு வந்திருக்கேன்.
Bank Manager: சம்பளம் கொடுக்க மாட்டாங்களா அப்போ நீ வேல வெட்டி இல்லாதவனா 
நாம்:அப்படியும் வச்சுக்கலாம் சார் 
Bank Manager: அடி செருப்பால .யார்ட அங்க இந்த நாய புடிச்சு நம்ம நாய்கிட்ட விடுங்கடா நீ வீட்டுலதான் அபீசுனு சொன்ன அப்பவே நான் சுதாரிச்சிருக்கணும்
நான்:ESCAPE....

No comments:

Post a Comment