Tuesday, 21 June 2016

யானையைப் பற்றி இந்த விஷயம் எத்தனைபேருக்கு தெரியும்

யா
னைகளின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது... தரையில் கிடக்கும் உடைந்த கண்ணாடி துண்டுகள் அதன் மொத்த எடையுடன் அதன் மீது வைத்தால் நன்றாக உள்ளே நுழையும்,அதன் பின்னால் அவைகளால் நடக்க முடியாது...
இரண்டு நாட்களில் சீழ் பிடிக்கும், புழுக்கள் சதையை துளைக்கும், நாள் ஒன்றுக்கு 30 லிட்டர் நீர் பருகி, 200 கிலோ உணவு உண்டு, 50 கிமி நடந்து வாழ வேண்டிய உயிர் இப்படி 5 நாட்கள் நின்றால் வேகமாக உடலிழைத்து துதிக்கையை ஊன்றி, உடல் நடுங்கி உயிரிழக்கும்...
உல்லாசமாக காடுகளுக்கு சென்று மது அருந்திவிட்டு உடைத்துப்போடும் ஒரு பீர் பாட்டில் அந்த காட்டையே நம்பி வாழும் இறைவனின் படைப்பான ஒரு யானையின் உயிரையே காவு வாங்கும்.
நீங்கள் குடித்து விட்டு தூக்கி எரியும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் விளைவுகள் அதிகம் .

No comments:

Post a Comment